மம்தா கூறுவது உண்மையில்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!
union minister nirmala seetharaman speech about mamtha banarji walk out
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசிக்கொண்டிருக்கும் போது மைக்கை அணைத்துவிட்டு அவமதித்ததாக கூறி வெளிநடப்பு செய்துள்ளார்.
இது உண்மை அல்ல'' என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் உரையை நாங்கள் கேட்டோம். ஒவ்வொரு முதல்வருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது.
அது திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மைக் அணைக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறுவது முற்றிலும் தவறு. ஒவ்வொரு முதல்வரும் பேசுவதற்கு உரிய நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், மைக் அணைக்கப்பட்டதாக அவர் கூறியது துரதிர்ஷ்டவசமானது.
அது உண்மை இல்லை. மறுபடியும் பொய்யை அடிப்படையாக கொண்ட கதையை உருவாக்குவதை விட, அவர் உண்மை பேச வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
union minister nirmala seetharaman speech about mamtha banarji walk out