தூத்துக்குடிக்கு விரையும் மத்திய நிதியமைச்சர்.! - Seithipunal
Seithipunal


குமரி கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17, 18-ந் தேதிகளில் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. 

இந்த வரலாறு காணாத அதி கனமழையினால், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. அதிலும் குறிப்பாக, தூத்துக்குடி நகரம் முழுவதுமே  வெள்ளத்தில் மூழ்கியது.

இந்த மழை பாதிப்பில் இருந்து நெல்லை தற்போது மீண்டுவரும் நிலையில், தூத்துக்குடியின் ஒருசில பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது. பல பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செல்லவுள்ளார். அதாவது, நாளை மறுநாள் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வதுடன், மழை வெள்ளப் பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்யவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister nirmala seetharaman visit thoothukudi floods effected area


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->