நம்பர் 1 பயங்கரவாதி ராகுல் காந்தி! ராகுல்காந்தி இந்தியரே கிடையாது! விளாசிய மத்திய மந்திரி!
Union Minister Ravneetsingh Bittu called Rahul Gandhi India number 1 terrorist
இந்தியாவின் நம்பர் 1 பயங்கரவாதி ராகுல் காந்தி என மத்திய இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சி எம்பிமான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார். வாஷிங்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா? குரூத்வாரா செல்ல அனுமதிக்கப்படுவாரா? அதற்கு இங்கு சண்டை நடக்கிறது என்று தெரிந்த கருத்து பாஜகவினர் இடையே பெரும் கோவத்தை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.அவர்களை தொடர்ந்து பல்வேறு சீக்கிய அமைப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு தெரிவித்ததாவது, ராகுல் காந்தி நமது தாய் நாட்டை அதிகம் நேசிப்பது இல்லை. என் கருத்துப்படி அவர் ஒரு இந்தியரும் இல்லை. ஏனென்றால் வெளிநாடுகளுக்கு சென்று தவறாக நமது நாட்டை பற்றி பேசி வருகிறார்.
பிரிவினைவாதிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் தயாரிப்பவர்களைதான் பாராட்டி உள்ளார். ஏனென்றால் ராகுல் காந்தி தான் நம்பர் ஒன் பயங்கரவாதி என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Union Minister Ravneetsingh Bittu called Rahul Gandhi India number 1 terrorist