பட்டியலின ஆசிரியயையை உயிருடன் எரித்து கொலை.. மர்மகும்பல் வெறிச்செயல்.!
Unknown persons fired in school teacher
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ரைசர் கிராமத்தில் உள்ள ஆகஸ்ட் 10-ம் தேதி காலை 8 மணியளவில் ரீகாரோன் பகுதியில் வசிக்கும் பட்டியலின ஆசிரியை அனிதா ரேகர் (வயது 32) தனது மகன் ராஜ்வீருடன் (வயது 6) வீணா நினைவு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் சிலர் அவரை சுற்றி வளைத்து தாக்கினர்.
மர்ம நபர்களிடம் இருந்து தப்பிக்க அனிதா அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தார். அவருக்கு உதவுமாறு டயல் 100-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் நீண்ட நேரமாகியும் போலீசார் அங்கு வரவில்லை. இதையடுத்து வாய்ப்பு கிடைத்தவுடன் ஆசிரியை மீது மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
தீயில் கருகிய அனிதா, உதவிக்காக அலறிக் கொண்டே இருந்தார், ஆனால் யாரும் காப்பாற்ற முன் வரவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஆசிரியையின் கணவர் தாராசந்த் தனது குடும்பத்தினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனைவியை ஜாம்வரம்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
70 சதவீத தீக்காயங்களுடன் இருந்த அனிதா, முதல் சிகிச்சைக்குப் பிறகு ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இறந்த ஆசிரியை அனிதா குற்றவாளிக்கு ரூ.2.5 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். பல நாட்களாக குற்றம் சாட்டப்பட்டவரிடம் தனது பணத்தை திரும்பக் கேட்டு வந்தார். பலமுறை பணம் கேட்டதால், குற்றவாளிகள் ஆசிரியரை தாக்கி துஷ்பிரயோகம் செய்தனர்.
இது தொடர்பாக அனிதா கடந்த மே 7-ம் தேதி ராயசர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தார். ஆசிரியை அளித்த புகாரின் பேரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடைசியில் அந்த பெண்ணை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது.
English Summary
Unknown persons fired in school teacher