வீட்டில் இருந்து வெளியேறிய கரும்புகை: தீயில் கருகிய நிலையில் கிடந்த 5 உடல்கள்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப்பிரதேசம், ஃபரித்பூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை பார்த்த அக்கப்பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது ஐந்து உடல்கள் தீயில் கருகிய நிலையில் கிடந்தன. 

மேலும் உயிரிழந்தவர்கள் அஜய் குப்தா (வயது 38), இவரது மனைவி அனிதா (வயது 36) இவர்களது மகன்கள், மகள் என அடையாளம் காணப்பட்டது. 

இதனை தொடர்ந்து போலீசார் ஐந்து உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP house fire family members death 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->