முதலிரவில் கொடூரம்! புதுமண தம்பதி மர்ம மரணம்! மணமகள் கழுத்தில் கிடைத்த ஆதாரம்!
UP New Marriage couple death in First Night
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் புதுமண தம்பதியினர் திருமணத்திற்குப் பிறகு மறுநாள் மரணமடைந்த சம்பவம் பகுதியைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மார்ச் 7ஆம் தேதி, அயோத்தியைச் சேர்ந்த பிரதீப் என்ற இளைஞர் மற்றும் ஷிவானி என்ற பெண்ணுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமண விழா உற்சாகமாக நடந்த நிலையில், இருவரும் அவர்களின் அறையில் தங்கினர்.
அடுத்த நாள் காலை வரையிலும் புதுமண தம்பதியினர் வெளியே வராததை கவனித்த உறவினர்கள், அவர்களை எழுப்ப முயன்றனர். பலமுறை கதவைத் தட்டியும் எந்த பதிலும் வராததால், அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்வையிட்டனர்.
அப்போது, பிரதீப் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்; ஷிவானி கட்டிலில் பரிதாபமாக உயிரற்ற நிலையில் கிடந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதித்தபோது இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, உடற்கூராய்வுக்காக இருவரது உடல்களும் அனுப்பப்பட்டது. விசாரணையில், ஷிவானி கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டதாகவும், பின்னர் பிரதீப் தற்கொலை செய்திருக்கக்கூடும் எனக் காவல்துறை சந்தேகிக்கிறது.
இருப்பினும் இந்த மர்ம மரணத்தின் காரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
UP New Marriage couple death in First Night