திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!
UPI service in Thirupathi Elumalaiyan temple
ஆந்திர பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், உலக பிரசித்தி பெற்ற இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள்.
இதில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சணம், சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த வகையில் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு திருப்பதி தேவஸ்தானம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பண பரிவர்த்தனைகளுக்கு பதில், டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
அதன்படி கோயில்களில் சேவை டிக்கெட், பிரசாதம், பஞ்சகவ்ய பொருட்கள், டைரி மற்றும் காலண்டர்கள் வாங்கும் பக்தர்களின் வசதிக்காக போன் பே, கூகுள் பே மற்றும் க்யூஆர் கோடு ஸ்கேனர், டெபிட் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பணம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
UPI service in Thirupathi Elumalaiyan temple