பாஜக கூட்டணியில் சலசலப்பு! பீகாரை போன்று நடக்குமா?
Uproar in the BJP alliance Will it happen like Bihar
என்.ஆர் காங்கிரஸ் ஆதரவால் வெற்றி பெற்ற பதவியை ராஜினாமா செய்யுங்கள்!
புதுச்சேரியில் கூட்டணியில் இருந்து கொண்டே முதல்வரை பதவி விலக சொல்லும் பாஜக எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராக என அரசு கொறடா கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
பாஜகவுக்கு ஆதரவளிப்பதால் தனது தொகுதியை மாநில அரசு புறக்கணிப்பதாக சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் சட்டமன்றத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல் பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் உள்ளிட்டோரும் ரங்கசாமியின் மீது புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் முதலவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் பேசிய அரசு கொறடாவும் சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் என்ஆர் காங்கிரஸ் ஆதரவால் பாஜகவினர் வெற்றி பெற்றனர். முதல்வருக்கு எதிராக பேசும் பாஜக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா என கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டு கூட்டணி முறிவு நிகழ்ந்து வருகின்றன.
பாஜகவுடன் வலுவான கூட்டணியில் பீகாரில் ஆட்சி அமைத்த நிதீஷ்குமார் சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் கூட்டணியை முறித்துக் கொண்டு எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளார். தற்போது அவர் காங்கிரஸ் தலைமையுடன் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இதே போல் தற்பொழுது புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி உடையும் சூழல் உருவாகியுள்ளது.
English Summary
Uproar in the BJP alliance Will it happen like Bihar