12 லட்சம் விளக்குகள்..! உலக சாதனைக்கு ரெடியாகும் உ.பி.!
utra pradesh ready to guinness record for deepavali
உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வரும் நிலையில், தொடர்ந்து 6-வது முறையாக தீபாவளி பண்டிகையை சிறப்புடன் கொண்டாடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
உத்தர பிரதேசத்தில் யோகி தலைமையிலான அரசு இந்த மாதம் 24 ந்தேதி வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
அந்த வகையில், அயோத்தியா நகரில் 12 லட்சம் விளக்குகளை ஏற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அயோத்தியா, லக்னோ, கோண்டா மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மண்ணால் ஆன விளக்குகளை கொள்முதல் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.
கடந்த 5 வருடங்களில் இதுவரை இல்லாத வகையில், இந்த ஆண்டில் 30 நிமிடங்களுக்கும் கூடுதலாக இந்த விளக்குகள் எரியும். நீண்ட நேரம் எரியும் விளக்குகளை மக்கள் காணலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு வரை, விளக்குகள் அனைத்தும் விரைவாக அணைந்து விடும். இதனால், விளக்கொளியின் பிரமிப்பை மக்களால் பார்க்க முடியாமல் போனது. இந்த வருடம் விளக்குகள் நீண்ட நேரம் எரிவதற்காக தலா 40 மி.லி. எண்ணெய் விளக்கில் ஊற்றப்படும்.
கடந்த ஆண்டு தீபோற்சவத்தின்போது, அயோத்தியாக நகரில் 9 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
utra pradesh ready to guinness record for deepavali