உருளைக்கிழங்கு இடத்தில் வறட்டி.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்..!
utrapradesh woman order watch but after delivary dry customer shock
அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்தி ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக மற்றொரு பொருட்களை அனுப்பும் செயல் சமீபக் காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது கடுமையான கோவத்தில் உள்ளனர். இந்நிலையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை அனுப்பி வைத்திருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கசெண்டா கிராமத்தைச் சேர்ந்த நீலம் யாதவ் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் ஆபரில் 1,304 ரூபாய் மதிப்புள்ள ரிஸ்ட் வாட்சை டெலிவரியின் போது பணம் செலுத்தும் வகையில் ஆர்டர் செய்திருந்தார்.
இதையடுத்து அந்த வாட்ச் ஒன்பது நாட்கள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. அந்த வாட்சை நீலம் தன்னுடைய சகோதரர் ரவேந்திராவுக்காக ஆர்டர் செய்திருந்தார். டெலிவரி செய்யப்பட்ட வாட்சை பார்ப்பதற்காக ஆர்வமாக பார்சலை பிரித்து பார்த்த ரவேந்திராவுக்கு அதிர்ச்சி காத்திருந்திருந்தது.
ஏனென்றால் அந்த பார்சலில், வாட்சுக்கு பதிலாக மாட்டு சாணத்தால் ஆன நான்கு வறட்டிகளே இருந்திருக்கிறது. அதன் பிறகு ஆர்டரை டெலிவரி செய்தவரை அழைத்து உடனடியாக ரிட்டர்ன் செய்ததோடு கொடுத்த பணத்தையும் திரும்ப பெற்றிருக்கிறார்கள். இது போன்ற குழப்பங்களில் இருந்து தப்பிப்பதற்காக ப்ளிப்கார்ட்டில் ஓபன் பாக்ஸ் டெலிவிரி என்ற அம்சமும் உள்ளது.
English Summary
utrapradesh woman order watch but after delivary dry customer shock