17 வயது தலித் சிறுமி பாலியல் பலாத்காரம் கொலை.. காட்டுப்பகுதிக்குள் அரங்கேறிய கொடூரம்.!!
Uttar Pradesh Lakhimpur Dalit child girl 17 years old rapped and murder
லக்கிம்பூர் பகுதியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் பகுதியில் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி பள்ளியில் வழங்கப்படும் தலித் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, அதற்கான படிவங்கள் மற்றும் சான்றிதழை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
ஆனால், சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் சிறுமியை தேடிய நிலையில், சிறுமி அங்குள்ள காட்டுப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். பின்னர் இந்த விஷயம் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி லக்கிம்பூரில் உள்ள மற்றொரு பகுதியில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், இரண்டு காமுகன்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Uttar Pradesh Lakhimpur Dalit child girl 17 years old rapped and murder