கேரளா : பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷின் தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்தி.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் மக்கள் வசிக்கும் இடங்களில் இருந்து பாம்புகளை மீட்டு பாதுகாப்பான பகுதியில் விடக்கூடிய சமூக ஆர்வலரான வாவா சுரேஷ், நேற்று நல்ல பாம்பு கொத்தியதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரள மாநிலத்தில் தனி ஒரு நபராக மக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில், தவறுதலாக வந்த  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு, வனப்பகுதியில் விடக்கூடிய பணியில் சமூக ஆர்வலர் சுரேஷ் ஈடுபட்டு வந்தார். 

இந்த நிலையில், நேற்று மாலை (30 .1 .2022) கோட்டயம் மாவட்டம், சங்கனச்சேரி அடுத்த குரிச்சி கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் ஒரு நல்ல பாம்பை வந்துவிட்டதாக, வாவா சுரேஷிற்கு, அந்த கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பை பிடிப்பதற்காக வந்த சுரேஷ், அந்த பாம்பை நீண்ட நேரம் கழித்து ஒரு வழியாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பை மக்கள் முன்னிலையில் அவர் எடுத்து வந்திருந்த சாக்கு பையில் போட முயற்சித்த போது, எதிர்பாராத விதமாக சுரேஷின் தொடை பகுதியில் அந்த பாம்பு கொத்தியது.

இதனையடுத்து உடனடியாக அவர் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்தனர்.

இன்று காலை வரை அவரை அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், தற்போது வாவா சுரேஷின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vava suresh health report


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->