கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்! குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.! - Seithipunal
Seithipunal


கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அங்கு உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக தனியார் நிறுவன கண் ஆய்வு நிறுவனத்தை தொடங்கி வைத்தார். 

அப்போது நிகழ்ச்சியில் அவர், கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். இதற்கான ஊடக பிரச்சாரத்தில் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

ஊரகப் பகுதிகளில் அரசின் துணை மருத்துவ மையங்கள் திறக்கப்படும் போது அவற்றுக்கு தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பாக இருக்கவேண்டுமென்றும், பார்வை குறைபாடு என்பது தவிர்க்க கூடியதும், குணப்படுத்தக் கூடியதுதான் என்ற தகவலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vice president says increasing eye awareness


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->