விஷன் 2041-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!
Vision 2041 sc case
இமாச்சல பிரதேச மாநிலத்தின் முக்கிய சிறப்பே மலைகளும், காடுகளும் தான். அம்மாநிலத்தின் சிம்லா நகரில், வளர்ச்சிப் பணிகள் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்காத வகையில் ஒரு வழிகாட்டுதல் நெறிமுறையை தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2017-ல் உத்தரவிட்டது.
இந்த நிலையில், அம்மாநில அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ‘விஷன் 2041’ என்ற பெயரில் சிம்லா வளர்ச்சி திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது.
இந்த திட்டம் தேசிய பசுமை தீர்ப்பாயம் 2017-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக உள்ளது என்று, தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.
இந்த தடையை எதிர்த்து அம்மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், வரைவு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
அந்த உத்தரவின்படி மாநில அரசு வெளியிட்ட வரைவு அறிக்கையில், 97 பேர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக மாநில அரசு தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வளர்ச்சி, சுற்றுச்சூழலுக்கு நடுவே சமநிலையை பராமரிக்கும் கோணத்தில் இந்த திட்டத்தை நாங்கள் ஆய்வு செய்ய உள்ளோம் என்று கூறி, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.