ஒரு வழியாக..வாக்கு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் உள்ள வாக்குகள் பதிவான வாக்குகள் மற்றும் வாக்கு பதிவு சதவீதத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மார்ச் மாதம் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவித்தது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில், பாஜக, அதிமுக, திமுக, நாதக என இந்த முறை நான்குமுனை போட்டி நிலவியது.

இதுவரை நடந்து முடிந்த 5 கட்டம் மக்களவைத் தேர்தலில் தொகுதிவாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டும் தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது. வாக்குபதி விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பாக எழுந்த விமர்சனங்களை அடுத்து, தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VotePolling details release election commission


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->