வாடகைக்கு காதலன் வேண்டுமா? வீதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
Want a boyfriend to hire? Posters on the streets!
பெங்களூருவில் 'வாடகைக்கு காதலன் வேண்டுமா? ஒரு நாளுக்கு ரூ 389 கொடுத்தால் போதும்' என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று பிப்ரவரி 14 கொண்டாடப்பட்டது.இந்நிலையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் 'வாடகைக்கு காதலன் வேண்டுமா? ஒரு நாளுக்கு ரூ 389 கொடுத்தால் போதும்' என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது விசித்திரமாக உள்ளது .இந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அந்த போஸ்டரில் ஒரு QR கொடு ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான தகவல்களை பெற அதை ஸ்கேன் செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெட்டிசன்கள் பலர் இந்த போஸ்டரை இணையத்தில் பகிர்ந்து காவல்துறையினர் டேக் செய்தனர்.
காதலரை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை ஜப்பான், சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக பிரபலமாக உள்ளது.தற்போது இந்தியாவிலும் 2018 ஆம் ஆண்டு 'ரென்ட் எ பாய்பிரண்ட்' என்ற தளம் மும்பையில் தொடங்கப்பட்டது. இதையடுத்து 2022 ஆம் ஆண்டில், இதே போன்ற சேவைகள் பெங்களூரு மற்றும் பிற பெருநகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Want a boyfriend to hire? Posters on the streets!