வயநாட்டில் பிரதமர் மோடி! பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்!
Wayanad Landslide PM Modi Pinarayi Vijayan
கடந்த மாதம் 30-ம் தேதி கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். காணாமல் போன பலரை இன்று 11 வது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா வயநாடு வந்துள்ளார். முதலாவதாக ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த பிரதமர் மோடி, சூரல்மலையில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிப்புகள், மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், எத்தனை பேர் பாதிப்பு மற்றும் முகாம்கள் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பிரதமர் மோடியுடன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியும் உடன் வந்தார்.
முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உள்பட பலர் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Wayanad Landslide PM Modi Pinarayi Vijayan