200 பேரை காணவில்லை! வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - பினராயி விஜயன்! - Seithipunal
Seithipunal


நிலச்சரிவில் சிக்கி  316 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், வயநாடு நிலசரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகளை குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பினராயி விஜயன் சென்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்ததாவது, வயநாட்டில் மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் காப்பாற்றப்பட வேண்டிய நபர்கள் அனைவரும் காப்பாற்ற பட்டு வருகின்றனர் இனி அங்கிருந்து மீட்கபட வேண்டியவர்கள் இல்லை என்று ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

முண்டகை, சூரல்மலை பகுதிகளில் 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்கள் மண்ணுக்குள் சிக்கியதால் அவர்களின் உடல்களை மீட்க முடியவில்லை. நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்கால வாழ்க்கையை குறித்து செய்ய வேண்டிய செயல்களே ஆகும்.

வயநாட்டில் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வருபவர்கள் நேரடியாக வயநாடு வர வேண்டாம். இந்த பேரழிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wayanad landslide should be declared a national calamity Pinarayi Vijayan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->