குழந்தைகளை தத்தெடுக்க பிரத்யேக இணையதளம் - மத்திய அமைச்சர் தகவல்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது, குழந்தைகளை சட்டப்பூர்வமாக தத்தெடுப்பதில் உள்ள சிரமங்கள், அதனைப் போக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவைக் குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பதிலளித்ததாவது:- குழந்தையை ஐந்து ஆண்டுகள் பராமரித்து சான்று பெற்ற பிறகே தத்தெடுக்க முடியும் என்ற கால அளவு இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. 

தத்தெடுக்கும் பெற்றோர் பிற்காலத்தில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் விதிமுறைகள் மாற்றப்பட்டு சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்தார். 

மேலும், குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறைகளை எளிதாக்க, எல்லோரும் பயன்படுத்தும் விதமாக 'கேரிங்க்ஸ்' என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கால தாமதங்கள் தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

website start for child adoption union minister smiriti irani info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->