மேற்கு வங்கம் :: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 7 பேர் பலி.! முதல்வர் இழப்பீடு அறிவிப்பு - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் இழப்பீடு அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எக்ராவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் திடீரென இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வெடிவத்திற்கு வருத்தம் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச சிகிச்சை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal cm compensation announced for 7 killed in firecracker factory blast


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->