இழிவுபடுத்த நினைத்தால்.‌. "கடவுள் ஆசீர்வதிக்கட்டும்".. மே.வ ராஜ்பவன் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவி ஆனந்த போஸ கடந்த நவம்பர் 23, 2022 முதல் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீது கொல்கத்தா ராஜ் பவனில் பணியாற்றும் தற்காலிக ஊழியரான பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா ஹரே ஸ்ட்ரீட் பகுதி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் தனக்கு நிரந்தர வேலை வழங்குவதாகக் கூறி அழைத்து தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக எழுத்துப்பூர்வமாக அந்தப் பணிப் பெண் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் மாளிகை எக்ஸ் சமூக வலைதளத்தில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி ஆனந்த போஸ் கூறியதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் "உண்மை வெல்லும், உருவாக்கப்பட்ட கதைகளால் நான் பயப்பட மாட்டேன்.

யாரேனும் என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற விரும்பினால், கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். ஆனால், மேற்கு வங்கத்தில் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை அவர்களால் ஒருபோதும் தடுக்க முடியாது" என குறிப்பிட்டுள்ளது. 

முன்னதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் ஆளுநர் மீதான பாலில் குற்றச்சாட்டு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal governor explain about harrasment allegation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->