மேற்குவங்கதில் வெடித்தது கலவரம்! வாக்குச்சாவடிகள் அடித்து உடைப்பு! துப்பாக்கி சூடு, நாட்டு வெடிகுண்டு வீச்சு!  - Seithipunal
Seithipunal


மேற்குவங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது பயங்கர வன்முறை வெடித்துள்ளது.

அம்மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கியது. தேர்தலுக்காக  சுமாா் 65,000 மத்திய காவல் படை வீரா்கள், மாநில காவல் துறையைச் சோ்ந்த 70,000 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுட்டு வருகின்றனர்.

இருப்பினும் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினா் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்துள்ளது.

தேர்தல் நடைபெறும் பல இடங்களில் வன்முறையாளர்கள் துப்பாக்கி சூடு மற்றும் நாட்டு வெடிகுண்டை வீசி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு பகுதியில் வாக்குச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு, வாக்கு பெட்டிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 

கடும் வன்முறை காரணமாக பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இந்த தேர்தலை நிறுத்த வேண்டும். இந்த தேர்தல் சட்ட விரோதமானது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வன்முறை, கலவரம் குறித்து வெளியான தகவலின்படி, அம்மாநிலத்தில் உள்ள அணைத்து கட்சியினரும் இதில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal Local Body Election july 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->