அடுத்தடுத்து முடங்கிய சர்வர்கள் - அதிர்ச்சியில் வாட்ஸாப் பயனர்கள்.!!
whatsapp server down in india
உலகின் பிரபல நிறுவனமான மெட்டா முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் செயலிகளை இயக்கி வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியின் சேவை இன்று இந்தியாவில் முடங்கியது.
இதனால், ஆயிரக்கணக்கான பயனர்கள் தகவல்களை அனுப்பவோ அல்லது நிலைகளைப் பதிவேற்றவோ முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து, பயனர்கள் டவுன் டிடெக்டர் வழியாக தங்களது சிக்கல்களை புகாராக அளித்தனர்.

இது தொடர்பாக நிகழ்நேர செயலிழப்பு கண்காணிப்பு சேவை டவுன் டிடெக்டர் தெரிவித்துள்ளதாவது:- "கிட்டத்தட்ட 81% பயனர்கள் தகவல்களை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். அதே நேரத்தில் 16% பேர் ஒட்டுமொத்த பயன்பாட்டு செயல்பாட்டில் சிக்கல்களை சந்தித்தனர்" என்று தெரிவித்தது.
இந்த செயலிழப்புக் குறித்து மெட்டாவுக்குச் சொந்தமான தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் பயனர்கள் சிக்கல்களைப் புகாரளித்தனர். இதற்கு முன்னதாக, இந்தியா முழுவதும் பல இடங்களில் UPI சேவைகள் முடங்கின. இதனால் பயனர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்த முடியாமல் போனதாக புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
whatsapp server down in india