'வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியது'...! ரஷ்யாவுக்கு இந்தியத் தூதரகம் விடுத்த அறிக்கை!!!
Deliberate attack Indian Embassy statement to Russia
கடந்த 3 ஆண்டுகளாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நீடித்துக் கொண்டிருக்கிறது.இந்தப் போரில் உக்ரைன்,வட கோரியா ராணுவப்படையை ரஷ்யா நாட்டிற்கு ஆதரவாக செயல்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.

இதன் இடையில், அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி, சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று இந்திய மருந்து நிறுவனத்தின் குடோனை தாக்கியது.இதுதொடர்பாக இந்தியத் தூதரகம் உக்ரைனுக்கு அறிக்கையில் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்தியத் தூதரகம்:
அதில் குறிப்பிட்டிருப்பதாவது,"உக்ரைனின் குசும் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் குடோனை ரஷ்யா ஏவுகணை ஒன்று தாக்கியது. இந்தியாவின் நட்பு நாடு என கூறும் ரஷ்யா, இந்திய வணிகங்கள் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தியது.
இதன்மூலம் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான மருந்துகள் அழிகின்றன" எனத் தெரிவித்துள்ளது.இதற்க்கான எதிர்ப்போ அல்லது பதிலோ இதுவரை ரஷ்யாவிடமிருந்து எதுவும் கிடைக்கவில்லை.
English Summary
Deliberate attack Indian Embassy statement to Russia