கருப்பாக இருப்பதாக கணவன் மீது வெறுப்பை காட்டிய மனைவி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


கணவன் கருப்பாக இருப்பதால் மனைவி வெறுப்பாக இருந்ததால், அந்த தம்பதியினருக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் ஆகிய ஒரு தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். ஆனால் இவர்களுக்கு திருமணமான அடுத்த சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் 2012 ஆம் ஆண்டு பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.  குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து விவாகரத்து கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்துள்ளார். 

அந்த வழக்கில் கணவனின் கருப்பு நிறத்தை முன்வைத்து மனைவியை வெறுப்பு காட்டியதாக கணவர் தரப்பில் முறையிடப்பட்டது. பதிலுக்கு மனைவி தரப்பில் கணவர் வீட்டிலிருந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக குடும்ப வன்முறையின் கீழ் மனைவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. 

மேலும் திருமண உறவுக்கு மீறி கணவருக்கு வேறொரு பொண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், ஒரு குழந்தை இருப்பதாகவும் மனைவியை குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் கணவனை வெறுத்த மனைவி தனது மகளுடன் கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசிக்க ஏதுவாக கணவன் மற்றும் அவரது குடும்பத்தின் மீது பொய் புகார் கொடுத்தது வழக்கு விசாரணையில் தெரிய வந்தது.

 மேலும், கணவனின் கருப்பு நிறத்தை  வெறுத்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது. இவை இரண்டும் குடும்ப உறவில் கொடுமை செய்தலில் அடங்கும் என வகைப்படுத்திய நீதிபதி விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife teasing black husband court give to divorced


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->