மனிதர்களை வேட்டையாடும் ஓநாய்கள்! சுட்டுப்பிடிக்க உத்தரவு! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலதில் 8 குழந்தைகள் உள்பட 9 பேரை கடித்து கொன்ற ஓநாய்களை சுட்டு பிடிக்க நடவடிக்கை.

உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 8 குழந்தைகள் உட்பட என மொத்தம் 9 பேரை வேட்டையாடிய ஓநாய்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து, உத்தர பிரதேம் பஹ்ரைச் மாவட்டம் வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ள கிராமங்களில் ஓநாய்கள் உள்ளே புகுந்து மனிதர்களை வேட்டையாடுவது தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. இதுவரை வேட்டை நின்றபடி இல்லை.

இந்நிலையில், ஓநாய்களை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடிக்க எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிவடிந்தது. இதனால் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மனிதர்களை வேட்டையாடும் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு தெரிவித்துள்ளார்.

மேலும்,  துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் ஓநாய்கள் வேட்டையில் இறக்கப்பட்டுள்ளன. பின்னர் ஓநாய்களை மயக்க மருத்து கொடுத்து சுட்டு பிடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். இந்த வேட்டை பயனளிக்காத நிலையில் ஓநாய்களை சுட்டு கொல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wolves hunting humans Order to shoot


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->