காதலனோடு வாழ மாமியார் மாமனாரை திட்டமிட்டு கொலை செய்த மருமகள்.! - Seithipunal
Seithipunal


காதலனோடு வாழ மாமியார் மாமனாரை திட்டமிட்டு கொலை செய்த மருமகள்.!

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பாகீரதி விஹார் நகரில் நேற்று இரட்டைக்கொலை நடந்துள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது வயதான தம்பதியர் இருவர் படுக்கை அறையில் கழுத்து அறுபட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. 

இதைப்பார்த்த போலீசார் வயதான தம்பதியரைக் கொலை செய்து விட்டு மர்மநபர்கள் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள் பாகீரதி விஹாரைச் சேர்ந்த ராதே ஷியாம் வர்மா மற்றும் அவரது மனைவி வீணா என்பது தெரிய வந்தது. 

இவர்களின் மகன் ரவி ரத்தன் வீட்டின் மேல்தளத்தில் மனைவி மோனிகா வர்மாவுடன் வசித்து வந்துள்ளனர். இதையடுத்து, போலீசார் ரவி ரத்தனிடம் விசாரணை செய்ததில் கடைசியாக இரவு 10.30 மணியளவில் தனது பெற்றோரைப் பார்த்ததாக ரவிரத்தன் போலீஸாரிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வர்மா வீட்டிலிருந்து 4.50 லட்ச ரூபாய் பணம் மற்றும் நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. மேலும், இந்த இரட்டைக்கொலை சம்பவத்தில் ரவிரத்தனின் மனைவி மோனிகா வர்மாவுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின்னர் போலீசார் மோனிகா வர்மாவை விசாரணை செய்ததில், அவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததும், தன் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக மாமனார், மாமியாரைக் கொலை செய்து விட்டு அவர்களது பணம், நகைகளோடு தப்பிச்செல்லலாம் என்று மோனிகா வர்மா திட்டமிட்டதும் தெரியவந்தது.

மேலும், மோனிகாவின் காதலன், அவரது கூட்டாளி இருவரும் சேர்ந்து வர்மாவையும், அவரது மனைவியையும் கழுத்தை அறுத்துக்கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரவிரத்தனின் மனைவி மோனிகா வர்மாவை கைது செய்து, தலைமறைவாக உள்ள அவரது காதலன் மற்றும் அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman arrested for kill father in law and mother in law in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->