காதலில் விழுந்த மகள்கள்! காவல் நிலையத்தில் சரணடைந்த ஒரு தந்தையின் அதிர்ச்சி பின்னணி!
woman honor killing father appear police station
பெங்களூரு, பிதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45) இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு கவனா (வயது 20) உள்பட 2 மகள்கள் உள்ளனர்.
இவரது மூத்த மகள் கவனா தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இரண்டாவது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து கடந்த 10 ஆம் தேதி காதலனுடன் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
அந்த பெண்ணுக்கு 17 வயது ஆவதால் போலீசார் அவரை மகளிர் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர் இந்த விவகாரத்தில் கவனா தங்கைக்கு உதவி செய்திருக்கலாம் என மஞ்சுநாத் சந்தேகமடைந்து அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
இதற்கிடையே கவனா வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாக தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத் உனது தங்கை வேறு சமூகத்தைச் சேர்ந்தவருடன் ஓடி விட்டார்.
இப்போது நீயும் வேறு சமூக சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக தெரிவிக்கிறாயா என ஆத்திரமடைந்து இறைச்சி வெட்டுவதற்கு பயன்படுத்திய கத்தியை எடுத்து மகள் என்றும் பாராமல் கவனா கழுத்தை வெட்டியுள்ளார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மஞ்சுநாத் இது தொடர்பாக காவல் நிலையத்தில் தனது மகளை ஆணவகொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த கவனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கவனா வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்ததால் ஆத்திரமடைந்த தந்தை அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
woman honor killing father appear police station