ஆந்திராவில் கொடூரம் - சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஆசிட் வீசி கொலை.!! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் கொடூரம் - சாலையில் நடந்து சென்ற பெண் மீது ஆசிட் வீசி கொலை.!! போலீசார் விசாரணை.!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா அருகே எலூர் பகுதியைச் சேர்ந்தவர் எட்லா பிரான்சிகா. இவர் அங்குள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் ராஜமுந்திரியில் என்ஜினீயராக பணியாற்றி வந்துள்ளார்.

இதில், பிரான்சிகா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் தங்கி வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், பிரான்சிகா சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் அவர் மீது ஆசிட் வீசியுள்ளனர். 

இந்தத் தாக்குதலில் அவரது தலை, முகம் மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு வலியால் அலறி துடித்தபடி சாலையில் விழுந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் ஓடி வந்து பிரான்சிகாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விஜயவாடா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
 இதற்கிடையே பிரான்சிகாவின் பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். 

அந்த புகாரின் படி போலீசார் சம்பவ பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இருப்பினும் போலீசார் இது தொடர்பாக இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman kill with throw acid in andira


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->