அங்கன்வாடியில் வேலை - 20 பெண்களிடம் அத்துமீறிய அரசு ஊழியர்கள்.!
woman pettition against two peoples in rajasthan
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிரோஹி முனிசிபல் கவுன்சில் தலைவராக இருப்பவர் மகேந்திர மேவாடா. அதேபோல், சிரோஹி முன்சிபலின் முன்னாள் ஆணையாளராக இருப்பவர் மகேந்திர சவுத்ரி. நெருங்கிய நண்பர்களான இவர்கள் மீது பாலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், ”மகேந்திரா மேவாடா, மகேந்திர சவுத்ரி உள்ளிட்டோர் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து மிரட்டி வருகின்றனர். அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி என்னையும் ஏமாற்றி பலாத்காரம் செய்துவிட்டனர். வேலை தருவதாக கூறி என்னை அழைத்தனர். நான் அவர்கள் அழைத்த இடத்திற்குச் சென்றேன்.
அப்போது அவர்கள் எனக்கு உணவு, தங்குமிடம் ஏற்படுத்தி கொடுத்து பலாத்காரம் செய்தனர். மேலும், சாப்பிடும் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இந்த தவறை செய்து,
அதனை வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் தர வேண்டும், இல்லாவிட்டால் வீடியோவை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகின்றனர். இவர்கள் 2 பேரும் அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 20 பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து மிரட்டுகின்றனர்” என்றுத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது, ”இந்த சம்பவம் தொடர்பாக இதற்கு முன்பு புகார் வந்தது. ஆனால், பொய் புகார் என்று தெரிந்தது. ஆனால், இப்போது எட்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றுத் தெரிவித்தனர்.
English Summary
woman pettition against two peoples in rajasthan