2 தண்ணீர் கேன்களை 41 ஆயிரத்திற்கு விற்ற பெண் - அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் வசித்து வந்த பெண் ஒருவர் வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து செல்வதற்காக தனது அடுக்குமாடி குடியிருப்பை காலி செய்துள்ளார். அப்போது அவர் அந்த பகுதியில் வசித்தவர்களுக்கு தனது தண்ணீர் கேனை விற்பனை செய்வதாக முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில், "தண்ணீர் கேன்களின் இரண்டு புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து பெங்களூருவிலிருந்து செல்வதால் இதனை விற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அதன் அருகே இவற்றின் விலையாக 500 டாலர், அதாவது இந்திய மதிப்பின்படி ரூ.41 ஆயிரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த முகநூல் வாசிகள், இரண்டு தண்ணீர் கேன்கள் ரூ.41 ஆயிரமா? என்று அதிர்ச்சியடைந்தனர். இந்த பதிவை காண்பவர்கள், “இஎம்ஐ வசதி உண்டா?”, “தள்ளுபடி உண்டா?” என நகைச்சுவையாக கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sales 2 water canes 41000 in karnataga bangalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->