டெல்லியில் பராமரிப்பாளராக இருந்த பெண்ணுக்கு தன் மகளின் கண் முன்னே நடந்த அவலம் என்ன தெரியுமா?
woman who caregiver Delhi before her daughter eyes harassment happened
டெல்லியில் ஸ்வரூப் நகர் பகுதியிலுள்ள ஒரு பண்ணை வீட்டின் பராமரிப்பாளராக இருந்த 37 வயது பெண் தனது மகளின் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இதில், குற்றம் சாட்டப்பட்டவர் பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த 35 வயதான தர்மேந்திரா என அடையாளம் காணப்பட்டார்.
மேலும், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி, நள்ளிரவில் தனது 11 வயது மகளுடன் பண்ணை வீட்டின் வராண்டாவில் பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் வசித்த தர்மேந்திரா என்பவர் சுவர் ஏறிக் குதித்துள்ளான்.
இதில், பெண் மற்றும் அவரது மகளின் கை, கால்களைக் கட்டிபோட்டுவிட்டு, சிறுமியின் கண்முன்னே தாயை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.
இந்தச் சம்பவத்தில், தனக்கு நேர்ந்தது குறித்து அப்பெண் கடந்த செவ்வாய்க்கிழமை காவலில் புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தர்மேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
woman who caregiver Delhi before her daughter eyes harassment happened