அமெரிக்காவில் உடைமைகளை இழந்து தவித்த ஹைதராபாத் மாணவி - மீட்டுத்தரக் கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உடைமைகளை இழந்து தவித்த ஹைதராபாத் மாணவி - மீட்டுத்தரக் கோரி மத்திய அமைச்சருக்கு கடிதம்.!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மவுலாலி பகுதியை சேர்ந்தவர் சையிதா ஹவாஜ் பாத்திமா. இவரது மகளான சையிதா லுலூ மின்ஹாஜ் குவைதி எம்.எஸ். படிப்பதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் உள்ள சிகாகோவிற்கு சென்றார். 

அங்கிருந்து சையிதா லுலூ நாள்தோறும் தனது தாயிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், இவர் கடந்த இரண்டு மாதங்களாக தாயை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் கவலையில் இருந்த பாத்திமா, தனக்கு தெரிந்த சிலரிடம் அமெரிக்கா சென்று தனது மகள் குறித்து விவரங்களை அறியுமாறு கேட்டுக் வந்தார்.

அதன்படி அங்குச சென்ற சிலர், லூலூ தனது உடைமைகளை இழந்து, சிகாகோ தெருக்களில் பசியோடு, மனநிலை பாதித்தவர் போல் சுற்றி திரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் லூலூவை பிடித்து பாதுகாப்பாக ஒரு இடத்தில் தங்க வைத்து விட்டு, பின்னர் சம்பவம் தொடர்பாக அவரது தாய்க்கு தகவல் தெரிவித்தனர். 

இந்தத் தகவலைக் கேட்டு பதறிப்போன பாத்திமா, உடனடியாக மகளை ஹைதராபாத்துக்கு கொண்டு வர மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மேலும், தெலங்கானா மாநில அரசும் இந்த விவகாரத்தில் தலையிட்டு மகளை அமெரிக்காவிலிருந்து மீட்டு வர நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதல்வருக்கும் விண்ணப்பித்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman wrote letter to union minister jaisangar for rescue daughter from america


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->