5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை அடித்தே கொன்ற பெண்கள்..! - Seithipunal
Seithipunal


5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை பெண்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழா பார்ப்பதற்கு அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தனது ஐந்து வயது பெண் குழந்தையுடன் வந்துள்ளார்.

குழந்தையை அங்கு விட்டுவிட்டு பிரசாதம் வாங்குவதற்காக சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும்போது குழந்தையை காணவில்லை. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அனைத்து இடங்களிலும் தேடி உள்ளார். ஆனால் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவரும் காணாமல்போயுள்ளார். இதனால் அவர் மீது கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை அங்குள்ள வனப்பகுதியில் சிறுமி ஆடைகள் இல்லாமல் அழுது கொண்டிருந்ததை சிலர் பார்த்தனர். இதனையடுத்து சிறுமியை மீட்டு கிராம மக்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமை உள்ளானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் சந்திகேகித்தா அவரை தேட தொடங்கினர். உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தது கண்டறிந்தவர்கள். வெளியே இழுத்து வந்து பின்னர் அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து இரும்பு கம்பி உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர்.

 இதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர கிராமப் பெண்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womans Beaten and kill Who sexually Abiluse 5 years Child


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->