மகாராஷ்டிரா || ஓடும் பேருந்தில் சில்மிஷம் - அதிரடி காட்டிய இளம்பெண்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி பகுதியை சேர்ந்தவர் பிரியா லஷ்கரே. ஆசிரியையான இவர் புனேவில் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தில் போதையில் இருந்த வாலிபர் ஒருவர் பிரியா லஷ்கரேவிடம் அத்துமீறி நடந்துள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த பிரியா போதை வாலிபரை கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து போதை வாலிபர் பிரியாவை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். உடனே பிரிய அந்த வாலிபரின் கன்னத்தில் தொடர்ந்து அறைந்தார்.

இதனை சக பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பிரியாவின் துணிச்சலை பாராட்டினர்.

ஒருவர், என்ன ஒரு ஷாட்! இது ஒரு பெண்ணின் சரியான பதில். எல்லா பெண்களும் இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், பொது இடங்களில் துன்புறுத்தலுக்கு எதிரான தெளிவான செய்தியை கூறியுள்ளார் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women slape boy running bus in maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->