வீட்டில் இருந்து வேலை பாருங்க!...காற்று மாசு அதிகரிப்பால் தீயாய் பரந்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் 4வது நாளாக காற்றின் தரம்  மிக மோசமான நிலைக்கு சென்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காற்றின் தரக்குறியீடு தொடர்ந்து 450-க்கும் மேல் உள்ள நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் நேற்று காற்று மாசு பிரச்சினை குறித்து எழுப்பப்பட்டது. அப்போது, காற்று மாசினை கையாள உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு பார் அசோசியேசன் தலைவர் கபில் சிபல் மற்றும்  வக்கீல்கள் தலைமை நீதிபதிகளான சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோரை கேட்டுக் கொண்டனர்.

காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்ததால், டெல்லியின் பல்வேறு பகுதியில் இன்றும் காலை அடர்ந்த மூடுபனி நிலவியது. இதனால் மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். மேலும் சில இடங்களில் புகை மூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட  பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவிடப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Work from home wide order due to increase in air pollution


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->