ஆசிரியையை கொலை செய்தவர் மீது சட்ட நடவடிக்கை பாயும்!...அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்!
Legal action will be taken against the person who killed the teacher minister snbil mahesh condemned
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த ரமணி என்பவர், வழக்கம்போல் இன்று வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வகுப்பறைக்குள் நுழைந்த ஒருவர் ஆசிரியரை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
இதில் நிலைகுலைந்து போன ஆசிரியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஆசிரியை குத்திக் கொலை செய்த சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Legal action will be taken against the person who killed the teacher minister snbil mahesh condemned