அன்பு சகோதரரே.. உங்கள் முயற்சியைக் கண்டு வியப்படைந்தேன் - கங்குவா குறித்து நடிகர் மாதவன்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 14-ம் தேதி வெளியான படம் 'கங்குவா'. இதுவரைக்கும் ரூ.130 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இந்தப்படத்தில் அதீத சத்தம், 3 டி காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்டவை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல், சூர்யாவையும் பலர் விமர்சித்து வந்தனர். 

இதற்கு நடிகை ஜோதிகா உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 'கங்குவா' படத்தை பார்த்த நடிகர் மாதவன் படக்குழுவை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

"நேற்று இரவு கங்குவா படத்தை திரையில் பார்த்தேன். உங்களின் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் கண்டு வியப்படைந்தேன் என் அன்பு சகோதரா.. நீங்கள் செய்ததில் பாதியையாவது நான் செய்ய விரும்புகிறேன். அற்புதமான முயற்சி' என்றுத் தெரிவித்துள்ளார்

நடிகர் மாதவன், தற்போது அதிர்ஷ்டசாலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தனுஷின் திருச்சிற்றம்பலம் பட இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor madhavan speech about kanguva movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->