ஜார்க்கண்ட் தேர்தல் : லாரிகளுக்கு தீ வைத்து மாவோயிஸ்டுகள் அராஜகம்! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபைக்கு நடப்பு மாதம் நவம்பர் 13-ம் தேதி 43 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில்,
மீதமுள்ள 38  தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் லதேஹர் மாவட்டத்தில் சுமார் 1.30 மணியளவில், 5 நிலக்கரி லாரிகளை மாவோயிஸ்டுகள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

சுமார் 12 மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தி, லாரிகளை மறித்தும், தொடர்ந்து ஓட்டுனர்களை கீழே இறக்கிவிட்டு லாரிகளை கொளுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த தாக்குதல் அரங்கேறிய இடத்தில் மாவோயிஸ்டுகள் விட்டுச் சென்ற ஒரு துண்டுப் பிரசுரத்தில், தங்கள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை நிலக்கரி போக்குவரத்தை தடுத்து நிறுத்த உள்ளதாகவும், இது தொடர்பாக  மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jharkhand election maoists anarchy by setting trucks on fire


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->