வந்தே பாரத் ரெயிலை இறக்குமதி செய்ய உலக நாடுகள் ஆர்வம்...மத்திய ரெயில்வே மந்திரி தகவல்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இருந்து வந்தே பாரத் ரெயிலை இறக்குமதி செய்ய பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன என மத்திய ரெயில்வே மந்திரி  அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு  கடந்த 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி இன்றுவரை 4 நாட்கள் நடைபெறுகிறது.இந்த மாநாட்டில், உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களின் செயல் அதிகாரிகளிடம் நாடுகள் மற்றும் மாநிலங்கள் சார்பில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் கோரப்படுகிறது.

இந்தநிலையில் இந்த பொருளாதார மாநாட்டில் இந்தியா சார்பில் 5 மத்திய மந்திரிகள் மற்றும் 3 மாநில முதல்-மந்திரிகள் அடங்கிய மிக பெரிய குழு சென்றுள்ளது. இந்த பொருளாதார மாநாட்டில்,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,  உட்கட்டமைப்பு, மின்சார வாகனங்கள், பெட்ரோகெமிக்கல்ஸ், பாலியஸ்டர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உயிரியாற்றல், பசுமை ஹைட்ரஜன், பசுமை இரசாயனங்கள், தொழில்துறை வளர்ச்சி,மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் முதலீட்டுக்கான ஒப்பந்தம் போடப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இந்த பொருளாதார  மாநாட்டில் இன்று பங்கேற்று பேசிய மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவில் அரை கடத்திகள், உணவு பதப்படுத்துதல், தொழிற்சாலை பொருட்கள், முதலீட்டு பொருட்கள் மற்றும் பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டப்படுகிறது என்று கூறினார்.மேலும் பேசிய அவர் இந்தியாவில் இருந்து வந்தே பாரத் ரெயிலை இறக்குமதி செய்ய பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன என கூறினார்.

மேலும் இந்திய நாட்டில் முதன்முறையாக 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் புதுடெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது என்றும் இந்த ரெயில் கான்பூர் மற்றும் அலகாபாத் வழியே சென்றது என கூறிய மத்திய ரெயில்வே மந்திரி  அஸ்வினி வைஷ்ணவ் ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன என்றும் கூறினார். இவற்றில் மராட்டியம் ரூ.16 லட்சம் கோடி, தெலுங்கானா ரூ.60 ஆயிரம் கோடி மற்றும் ஆந்திர பிரதேசம் ரூ.2 முதல் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World keen to import Vande Bharat train Union Railway Minister 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->