3,200 கி.மீ. பயணம் செய்யும் உலகின் நீண்ட நேர சொகுசு கப்பல் சுற்றுலா - வருகிற 13-ந்தேதி முதல் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியிலிருந்து வங்காளதேசம் வழியாக அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் வரை செல்லும் 'கங்கா விலாஸ்' என்ற சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்கொள்ளப்படும் பயணத்தில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் பல்வேறு நதிகள் வழியாக அசாம் செல்லும் இந்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவிற்கான பணிகளை வாரணாசி மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. 

இருப்பினும் பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், இந்த தொடக்க விழாவிற்கான பணிகள் அனைத்தும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது என்று உத்தரபிரதேச சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 

இந்த சொகுசு கப்பல் வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இருந்து கிளம்பி காசிப்பூர், பங்சார், பாட்னா வழியாக கொல்கத்தாவை அடைந்து, வங்காளதேசம் வழியாக மொத்தம் 3,200 கி.மீ. பயணம் செய்து அசாமின் திப்ருகரை பகுதியை மார்ச் 1-ந்தேதி அடையும். 

மொத்தம் 50 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலாவில் உலக பாரம்பரிய சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டவை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க முடியும். 

பல்வேறு நவீன வசதிகள் அடங்கிய இந்த ஆடம்பர சொகுசு கப்பலை அன்டாரா மற்றும் ஜே.எம்.ராக்சி என்ற தனியார் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து இயக்குகின்றது. 

அதிலும் குறிப்பாக, தொலைநோக்கு பார்வையுடன் தனித்துவமான வடிவமைப்புகளை கொண்டுள்ள இந்த கப்பல் மூன்று மாடிகளை கொண்டது. இதில், 18 கேபின்கள், எல்.இ.டி. டி.வி., நவீன படுக்கை வசதி, பால்கனி, உணவகம், ஸ்பா என்று ஏராளமான ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worlds longest journey luxury cruise starts at jan13


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->