போராடும் மல்யுத்த வீராங்கனைகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றனர் - சக வீராங்கனை குமுறல்!
Wrestlers Protest Opposite party Politics BJP
பாஜக எம்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக, நீதி கேட்டு போராடும் மல்யுத்த வீராங்கனைகளை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் விமர்சித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களின் போராட்டத்தில் அரசியல் வேண்டாம் என்று முதலில் கூறியவர்கள், பின்னர் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மீ கட்சிகளின் ஆதரவை பெற்று போராட்டம் நடத்த தொடங்கினர்.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிகாட்டுவதாக மல்யுத்த வீராங்கனையும், பாஜக ஆதரவு மனப்பான்மையில் உள்ளவருமான பபிதா போகத் விமர்சித்துள்ளார்.
மேலும், பபிதா போகத் தெரிவிக்கையில், "பதக்கங்களை நதியில் வீச வீராங்கனைகளுக்கு யார் பரிந்துரைத்தவர்கள், தங்களின் அரசியல் சுயநலத்திற்காக செய்துள்ளனர்.
நான் மட்டும் அந்த இடத்தில இருந்தால் வீராங்கனைகள் காலில் விழுந்தாவது இதை தடுத்திருப்பேன். இப்படி அவர்கள் நடத்தப்படுவதில் எனக்கு வருத்தம். அரசின் மீதும், நீதித்துறையின் மீதும் வீராங்கனைகள் நம்பிக்கை வைக்க வேண்டும்" என்று பபிதா போகத் தெரிவித்தார்.
English Summary
Wrestlers Protest Opposite party Politics BJP