எங்களை மன்னித்துவிடுங்கள் - வீடியோ வெளியிட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்!
Wrestlers Protest Sakshi Malik video
எங்களின் போராட்டம் அரசியல் ஆதாயம் சார்ந்தது கிடையாது என்று, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது கணவர் சத்யவர்த் கதியனுடன் இணைந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர்களின் அந்த விடியோள், "இன்று மட்டும் அல்ல பல ஆண்டுகளாக மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். அன்றும் இன்றும் வீரர்கள் ஒற்றுமையாக இருந்ததில்லை. அதனால் தான் நாங்கள் அமைதி காத்தோம்.
இப்போது எங்களின் போராட்டம் குறித்து பல வதந்திகள் பரப்பப்படுகிறது. அவர்களுக்கு நான் சொல்வது ஒன்று தான். எங்களின் இந்த போராட்டம் அரசியல் ஆதாயம் சார்ந்தது இல்லை.
நாங்கள் ஜனவரி மாதம் டெல்லி ஜந்தர் மந்தருக்கு போராட்டம் நடத்த வந்தோம். எங்களின் போராட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டது பாஜகவுடன் தொடர்புடைய முன்னாள் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் மற்றும் தீரத் ராணா தான்.
இந்த போராட்டம் காங்கிரஸ் ஆதரவு கொடுத்து நடத்தப்படும் போராட்டம் இல்லை. நாங்கள் மல்யுத்த சம்மேளனத் தலைவருக்கு எதிராக போராடுகிறோம். மத்திய அரசுக்கு எதிராக போராடவில்லை. மே 28 ஆம் தேதி போலீசார் எங்களை நடத்திய விதம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
நாங்கள் இப்போது மிகுந்த மன வேதனையில் உள்ளோம். இதுபோன்ற சூழல்களை கையாளத் தெரியவில்லை. யாரை நம்புவது என தெரியவில்லை. நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் எங்களை மன்னித்துவிடுங்கள். எங்களுடன் துணை நின்று ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி" என்று அந்த காணொளியில் பேசியுள்ளனர்.
English Summary
Wrestlers Protest Sakshi Malik video