காதலித்து ஏமாற்றிய காதலனின் திருமணத்தில் ஆசிட் வீசிய இளம்பெண்.!
young girl acid attack at the wedding of a lover cheated on her
காதலித்து விட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தில் இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 25 வயது மிக்க இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது திருமணத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆசிட் வீசியதில் மணமகன், மணமகள் மற்றும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 10 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
மின்சாரம் தடை பட்ட நேரத்தில் இந்த சம்பவம் ஏற்பட்டதால் குற்றவாளியை யாரும் பார்க்கவில்லை. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் மணமகனின் முன்னாள் காதலி இதை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மணமகனுக்கும், ஆசிட் வீசிய இளம்பெண்ணுக்கும் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்தது தெரிய வந்தது.
இதில் அந்த இளைஞர் ஆசிட் வீசிய இளம்பெண்ணை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பது குறித்து தெரிய வந்ததும் அவர் மீது ஆசிட் வீச திட்டமிட்டதாக கூறியுள்ளார். இதற்காக அந்தப் பெண் தான் வேலை செய்யும் இடத்திலிருந்து ஆசிட்டை திருடியுள்ளார். அதன் பின்னர் ஆண் வேடமிட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசிட் வீசியதாக தெரிவித்துள்ளார்.
English Summary
young girl acid attack at the wedding of a lover cheated on her