உ.பி : இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபரின் வீடு தரைமட்டம்.!! - Seithipunal
Seithipunal


உ.பியில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த இளைஞரின் வீட்டை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பதேபூர்பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் குஜராத் மாநிலத்தில் வசித்து வருகின்றனர். அந்த குடும்பத்தை சேர்ந்த பத்தொன்பது வயது இளம்பெண்ணுக்கும் பதேபூர் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் கான் என்ற இளைஞருக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. 

அப்போது சிக்கந்தர் கான் தன்னை இந்து என்றும், தனது பெயர் சோனு என்றும் கூறி அந்த பெண்ணுடன் பழகி வந்தார். இதற்கிடையே அந்த பெண் கடந்த 22-ம் தேதி பதேபூரில் நடைபெற்ற உறவினரின் திருமணத்தில் பங்கேற்க குஜராத்தில் இருந்து பதேபூருக்கு வந்தார். 

அப்போது, சிக்கந்தர் கான் அந்த பெண்ணை தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார் சிக்கந்தர் கானை கடந்த 23-ம்தேதி கைது செய்தனர்.

இந்த நிலையில், உள்ளூர் வருவாய் துறை அதிகாரிகள், பதேபூரில் உள்ள சிக்கந்தர் கானின் வீட்டை ஆய்வு செய்ததில், அவர் அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது.

உடனே போலீசார் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு சிக்கந்தர் கான் வீட்டை இடித்து தள்ளியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man house collapse in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->