சுங்கச் சாவடி ஊழியரை ஹாக்கி மட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்கள் - போலீசார் வலைவீச்சு.!! - Seithipunal
Seithipunal


சுங்கச் சாவடி ஊழியரை ஹாக்கி மட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்கள் - போலீசார் வலைவீச்சு.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரில் கரிகல் கிராமத்தை சேர்ந்தவர் பவன்குமார். பெங்களூரு-மைசூரு இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வரும் இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது, இளைஞர்கள் சிலர் மைசூருவில் இருந்து பெங்களூரு நோக்கி காரில் வந்துள்ளனர். இந்தக் கார் சுங்கச்சாவடிக்கு வந்தபோது சுங்க கட்டணம் கொடுக்கும்படி கார் ஓட்டுனரிடம் பவன்குமார் கேட்டுள்ளார். இது தொடர்பாக பவன்குமாருக்கும் காரில் இருந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் முற்றிய நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பவன்குமார் உள்பட பிற ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின்னர், கட்டணத்தை கொடுத்துவிட்டு சுங்கச்சாவடியிலிருந்து காரில் வந்த இளைஞர்கள் புறப்பட்டு சென்றனர். 

இதையடுத்து பவன் குமார் நள்ளிரவு 12.30 மணியளவில் சுங்கச்சாவடி அருகே சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அந்த நேரத்தில், பவன்குமாரை பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் திடீரென்று பவன்குமாரை சுற்றி வளைத்து அடித்து, உதைத்து தாக்கினார்கள். அத்துடன் தங்களிடம் இருந்த ஆக்கி மட்டையால் பவன்குமாரை கண்மூடித்தனமாகவும் தாக்கினார்கள். 

இதில், பலத்த காயம் அடைந்த பவன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பவன்குமார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஆக்கி மட்டையால் அடித்து சுங்க ஊழியர் பவன்குமாரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man kill tollgate employee in banglore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->