புதுவை அருகே பயங்கரம் - கெத்துக் காட்டும் போட்டியில்  இளைஞர் படுகொலை! - Seithipunal
Seithipunal


யார் பெரிய ரவுடி என்று கெத்துப் போட்டியில்  புதுவை அருகே  இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம்  குமாரமங்கலம் பகுதியைச் சார்ந்த  கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தமிழரசன் வயது 32 . இவர் இந்த பகுதிகளில்  பிளம்பர் வேலை செய்து வருவதாக  கூறப்படுகிறது. மேலும் இவர் அடிக்கடி கட்டப்பஞ்சாயத்து என  ரவுடி செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும்  முன்விரோதம் மற்றும் போட்டி இருந்ததாக  தெரிகிறது. இந்நிலையில் காணும் பொங்கல் தினத்தன்று  பொங்கலைக் கொண்டாடலாம் என தமிழரசனை அவரது கூட்டாளிகள் மூன்று பேர்  அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரமாகியும் தமிழரசன் வீட்டுக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கின்றனர் அவர் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் அரங்கனூர் சுடுகாடு அருகே யாரோ ஒருவர் இறந்து கிடப்பதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அந்த பகுதிக்கு வரத்து சென்ற காவல் துறையினர்  அந்த உடலை கைப்பற்றி விசாரித்ததில் அது  தமிழரசன் உடையது என விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதும்  தெரிந்தது. இதனையடுத்து பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். யார் இந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தமிழரசன் கொல்லப்பட்டிருக்கலாம்  என்ற கோணத்தில்  போலீஸ் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man murdered near pond because of gang war 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->