ஆம்புலன்சில் கஞ்சா கடத்தல் - கையும் களவுமாக பிடிபட்ட வாலிபர்.!
youth arrested for kanja kidnape in chateesgarh
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு நேற்று நள்ளிரவு தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸை வழிமறித்து சோதனை நடத்தினர்.
அப்போது அந்த ஆம்புலன்சில் மூட்டை மூட்டையாக 364 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா, ஆம்புலன்ஸை பறிமுதல் செய்ததுடன் அதனை ஓட்டி வந்த இளைஞரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து ஆசாத் செளக் காவல் கண்காணிப்பாளர் மயங்க் குர்ஜார் கூறுகையில், "அமனகா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் நடத்திய சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 364 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், இந்த கடத்தலில் ஈடுபட்டவர் சூரஜ் ஹூதே என்பதும், இவர் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்து வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
youth arrested for kanja kidnape in chateesgarh