காதலியுடன் வசதியாக வாழ வெறித்தனமாக செயல்பட்ட வாலிபர் - செல்போனால் சிக்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


காதலியுடன் வசதியாக வாழ வெறித்தனமாக செயல்பட்ட வாலிபர் - செல்போனால் சிக்கிய சம்பவம்.!

புதுச்சேரி மாநிலத்தில் சின்ன காலாப்பட்டு பகுதியை சேர்ந்த வரதன் என்பவர் நேற்று உடல்நிலை சரியில்லாத தனது உறவினரை சந்திப்பதற்காக விழுப்புரம் மருத்துவமனைக்கு சென்று இருந்தார்.

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர் வரதன் வீட்டின் சமையலறை ஜன்னல் கதவை அறுத்து உள்ளே சென்று 4 பவுன் நகை, நாற்பதாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் ஒரு செல்போன் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார்.

இதையறிந்த வரதன் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில சோதனை செய்ததில், கைரேகை, சிசிடிவி, வாகனம் என்று கொள்ளையடித்து சென்றவர் வந்து சென்றதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை.

இதனால், போலீசார் மர்ம நபரை பிடிக்க அவர் திருடி சென்ற செல்போன் எண்ணை வைத்து தேடினர். அப்போது, அந்த செல்போன் சிக்னல் 1 கீ.மி தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் காட்டியுள்ளது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, பாழடைந்து இருந்த கட்டடத்தில் பையுடன் ஒரு நபர் தூங்கிக் கொண்டிருந்துள்ளர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் சோதனை நடத்தியதில், வரதன் வீட்டில் திருடபட்ட பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமியின் மகன் கோடீஸ்வரன் என்பதும், இவர் காதலியுடன் வசதியாக வாழ்வதற்காக பல இடங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for steal in puthuchery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->