இரவில் தனியாக வந்த வாலிபர்! போலீசார் துப்பாக்கியை வாலிபர் காரில் வைத்து கைது செய்த கொடுமை!
Youth arrested in lying case in Uttar Pradesh
உத்தரபிரதேசத்தில் பொய் வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வாலிபரை கைது செய்த நான்கு போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் புலன்நகர் பகுதியில் சேர்ந்தவர் அமீத். கடந்த 21ஆம் தேதி நிகழ்ச்சியில் ஒன்று கலந்து கொண்ட பிறகு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது அமித் சாலையில் காரில் வந்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்கள் அமித்தை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததாக கூறப்படுகிறது.
போலீசாருக்கும் அமத்துக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் காரில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்று கூறி அமித்தை காவலர்கள் கைது செய்து சிறையில் அடித்தது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமித்தை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ காட்சிகளில் சம்பவத்தன்று அமித் வந்த காரை போலீசார் நிறுத்துவது அதன் பிறகு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் இருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்து வந்து காரில் வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
சிகர்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. எது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து வாலிபர் மீது பொலி வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பி ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நான்கு போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதுபோன்று எந்த தவறான நடவடிக்கையிலும் காவல்துறை ஈடுபடக்கூடாது ஈடுபட்டால் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
English Summary
Youth arrested in lying case in Uttar Pradesh